Connect with us

இணையத்தில் வைரலாகும் அயலான் படத்தின் மேங்கிங் வீடியோ – நீங்களும் பாருங்க..!!

Cinema News

இணையத்தில் வைரலாகும் அயலான் படத்தின் மேங்கிங் வீடியோ – நீங்களும் பாருங்க..!!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமான வெளியான திரைப்படம் அயலான்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

பல வருட போராட்டத்திற்கு பின் திரைக்கு வந்து வெற்றிகண்டுள்ளதால் அயலான் படக்குழு தற்போது செம குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் குடும்பம் குடும்பாக சென்று திரைப்படத்தை கண்டு ஆதரவு கொடுத்து வருகின்ற்னர்.

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் மிரட்டுமா டெல்லி..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top