Connect with us

டிராகன் வெற்றி! அஸ்வத் மாரிமுத்துக்கு கிடைத்த ஜாக்பாட்!

Featured

டிராகன் வெற்றி! அஸ்வத் மாரிமுத்துக்கு கிடைத்த ஜாக்பாட்!

ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடையாளம் பெற்றவர் அஸ்வத் மாரிமுத்து. அவரது சமீபத்திய திரைப்படம் “டிராகன்” ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக எஸ்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பெயர் “God of Love”. இதையும் டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்நிலையில், ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி, ஒரு புதிய கதையைச் சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கமல்ஹாசனுடன் அஸ்வத் மாரிமுத்து கூட்டணி அமைப்பாரா? என்பதைத் தெரிந்துகொள்ள, இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது தான்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Featured

To Top