Connect with us

‘லப்பர் பந்து’ படத்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!

Cinema News

‘லப்பர் பந்து’ படத்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘லப்பர் பந்து’ படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை வெகுவாக ரசித்துள்ளேன். விளையாட்டு தொடர்பான படங்களில் காலங்காலமாக பின்பற்றப்படுபவைகளை தாண்டி, ஒரு படத்தை எந்தளவுக்கு உண்மைத் தன்மையோடு எடுக்க முடியும் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு பாடம்.

பொதுவாக கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கும் தமிழ்ப் படங்களில், அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைதான் சொல்வார்கள். அது எதுவும் இல்லாததால்தான் இப்படம் எனக்கு ஸ்பெஷலாக தோன்றுகிறது. மிக மிக உண்மையாக உள்ளது.

இப்படத்தில் எந்த கதாபாத்திரங்களும் தேவையற்றது என்றே தோன்றவில்லை. இயக்குநருக்கு பாராட்டுகள். ஹரிஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, சுவஸ்திகா, காளி வெங்கட், பாலா என அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top