Connect with us

எப்பா இந்த முறை எல்லாமே புதுசாம் – பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதி அறிவிப்பு..!!

Cinema News

எப்பா இந்த முறை எல்லாமே புதுசாம் – பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதி அறிவிப்பு..!!

சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதியை சிறப்பு ப்ரோமோவுடன் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் தாறுமாறான வரவேற்பை பெற்று வந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்துப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக பிக் பாஸ் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்த நிலையில் தற்போது இந்நிகழ்ச்சி தொடங்க இருக்கும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்நிகழ்ச்சி வரும் அக்டொபர் மாதம் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளதாக பிக் பாஸ் குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ⚠️🔥 ஜனநாயகன் படத்திற்கு 60 கோடி இழப்பா? OTT உலகை அதிர வைத்த சர்ச்சை!

More in Cinema News

To Top