Connect with us

“சாப்பிடும் முன் சாமி கும்பிட்ட விஷால்..! பக்கத்துல யோகி பாபு கொடுத்த Reaction! Viral Video!”

Cinema News

“சாப்பிடும் முன் சாமி கும்பிட்ட விஷால்..! பக்கத்துல யோகி பாபு கொடுத்த Reaction! Viral Video!”

சியான் விக்ரமை வைத்து சாமி படத்தை எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் ஹரி. ஆனால், பல ஆண்டுகள் கழித்து சியான் விக்ரமையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து அவர் இயக்கிய சாமி ஸ்கொயர் திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் ஹரி இயக்கத்தில் அருவா எனும் படத்தில் நடிக்க சம்மதித்த சூர்யா சில வாரங்களிலேயே அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்து விட்டார்.

நடிகர் விஷால் சமீபத்தில் ரத்னம் பட செட்டில் உருவாக்கப்பட்ட டாஸ்மாக்கிற்கு குடிமகன்கள் வந்து விட்டனர் என அவர்களை அடித்து திட்டி வெளியே அனுப்பிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் இது ஆக்‌ஷன் மேடம் என சொல்வதெல்லாம் உண்மை டெம்பிளேட்டை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

எம்ஜிஆரின் பிறந்தநாள் நினைவாக ரத்னம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் மரியாதை செலுத்தி பின்னர் அனைவருடனும் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ காட்சி தற்போது தீயாக பரவி வருகிறது.

சமீப காலமாக சாப்பிடும் முன்பாக அனைத்து மதக் கடவுள்களையும் வணங்கிவிட்டு விஷால் உணவு உண்ணும் முறையை கையாண்டு வருகிறார். விஷால் அருகே அமர்ந்துக் கொண்டு இருந்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு விஷால் சாமி கும்பிடுவதை பார்த்து “ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா” என்பது போல கொடுத்த ஃபேஸ் ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top