Connect with us

உங்களால முடிஞ்சா என்ன அடிங்க பாப்போம் – விஷ்ணுவிடம் ஒத்தைக்கு ஒத்தை நின்ற அர்ச்சனா..!! ஷாக்கிங் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

உங்களால முடிஞ்சா என்ன அடிங்க பாப்போம் – விஷ்ணுவிடம் ஒத்தைக்கு ஒத்தை நின்ற அர்ச்சனா..!! ஷாக்கிங் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஷ்ணுவிடம் ஒத்தைக்கு ஒத்தை நின்று அர்ச்சனா சண்டையிடும் ஷாக்கிங் ப்ரோமோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வந்துள்ள இன்றைய நாளுக்கான 2 ஆவது ப்ரோமோ ரொம்பவே காரசாரமாக வந்துள்ளது . அந்த ப்ரோமோவின் தொடக்கத்தில் பொலிச்சு பொலிச்சு என அறையவேண்டும் வேண்டும் என விஷ்ணு கூறிருக்கிறார். இந்நிலையில் தன்னை தான் விஷ்ணு கூறுகிறார் என்று கணித்த அர்ச்சனா முடிஞ்சா என்ன அடிங்க பாப்போம் என விஷ்ணுவிடம் ஒத்தைக்கு ஒத்தை நின்று சண்டை போடுகிறார்.

ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற அருகில் சிலை போல் நின்ற மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஏதோ சினிமாவில் வரும் காட்சி போல் அந்த சண்டையை பார்த்து ரசிக்கின்றனர்.ஏற்கனவே அர்ச்சனாவுக்கு விஷ்ணுவுக்கும் வாய் தகராறு இருந்து வந்த நிலையில் தற்பொழுது காய் தகராறு ஏற்படும் வகையில் இந்த ப்ரோமோ வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top