Connect with us

கடத்தல்காரர்களின் புகலிடமாக, மாறும் தமிழகம் – திமுகாவை குறிவைக்கும் அண்ணாமலை

Featured

கடத்தல்காரர்களின் புகலிடமாக, மாறும் தமிழகம் – திமுகாவை குறிவைக்கும் அண்ணாமலை

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக ,தமிழகம் மாறிவருவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார் .

இதுகுறித்து அண்ணாமலை இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக, நமது மாநிலத்தை மாற்றியதற்காக, திரு @mkstalin வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது,

தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் வேளையில், மு.க.ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்.

இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா? ஏன் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Featured

To Top