Connect with us

ஸ்டாலினின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய உதயநிதி..!!

Featured

ஸ்டாலினின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய உதயநிதி..!!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் அவரது மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை பரிசாக வழங்கி உள்ளார் .

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மாநிலத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக நமது #ChepaukTriplicane சட்டமன்ற தொகுதியில் இயங்கி வரும் அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் இன்று பிறக்கின்ற குழந்தைகளுக்கு தலா ஒரு தங்க மோதிரம் பரிசளிக்கும் விதமாக, இன்று காலை வரை பிறந்த 12 குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்து மகிழ்ந்தோம்.

தாய் – சேய் நலனை உறுதி செய்யும் வகையில் Baby Kits – ஐ வழங்கி வாழ்த்தினோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top