Connect with us

யாரிடமும் ஒத்த பைசா கூட திருடாத ஆட்சி தான் மோடியின் ஆட்சி – அண்ணாமலை பெருமிதம்..!!

Featured

யாரிடமும் ஒத்த பைசா கூட திருடாத ஆட்சி தான் மோடியின் ஆட்சி – அண்ணாமலை பெருமிதம்..!!

யாரிடமும் ஒத்த பைசா கூட திருடாத ஆட்சி தான் மோடியின் ஆட்சி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கொள்கைகள் குறித்தும் எதிர் வர இருக்கும் தேர்தல் குறித்தும் மக்களுடன் கலந்துரையாட தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பகுதிகளுக்கும் “என் மண் என் மக்கள்” என்ற நடைப்பயணத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் , தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலம், டெல்டா பகுதிகள் என தமிழகத்தின் 119 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றது.

அந்தவகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் என் மண் என் மக்கள் யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார். இந்த நடைப்பயணத்தின் போது மக்களிடம் எழுச்சி உரையாற்றிய அண்ணாமலை கூறியதாவது :

9 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நம் பாரத நாட்டில் நடைபெற்று வருகிறது . யாரிடமும் ஒத்த பைசா கூட திருடாத ஆட்சி தான் மோடியின் ஆட்சி. இப்படி பட்ட ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் 3ஆம் முறையாக அமைய உள்ளது தமிழகத்திலும் பாஜகவின் கை உயர எதிர் வரும் தேர்தலில் உங்கள் வாக்கு முக்கியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மௌனம் பேசியதே முதல் இன்று வரை 🌟 | திரிஷாவின் 23 ஆண்டுகளான பொற்கால திரையுலகப் பயணம் 🎬

More in Featured

To Top