Connect with us

“ஜோதிகா செய்யலாம், என் பொண்ணு செய்தா தப்பா?” – வனிதா விஜயகுமார் ஆதங்கம்!

Featured

“ஜோதிகா செய்யலாம், என் பொண்ணு செய்தா தப்பா?” – வனிதா விஜயகுமார் ஆதங்கம்!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திய அவர், ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த பிறகு சினிமாவை விலகவைத்தார். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் கவனத்தை ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியின் பின்னர் மீண்டும் சினிமா மற்றும் மீடியாவில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது, வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷனில் பங்கேற்ற வனிதா, தனது மகளை பற்றி வெளியிட்ட கருத்து பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

அதில், “என் மகள் ஜோவிகா மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாவாடை தாவணி அணிந்திருந்தார். அப்போது, அவரது இடுப்பு தெரியுவதாக சிலர் விமர்சனம் செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன் குஷி படத்தில் ஜோதிகா இடுப்பை காட்டி பிரபலமானார். அதே விஷயம் என் மகளிடம் நடந்தால் ஏன் இவ்வளவு பேசப்படுகிறது? என் மகள் அழகாக இருக்கிறார். அவளுக்கே என்ன உடை அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது,” என வனிதா தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top