Connect with us

‘குபேரா’ 5 நாள் வசூல் விவரம் – தயாரிப்பாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Featured

‘குபேரா’ 5 நாள் வசூல் விவரம் – தயாரிப்பாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த ‘குபேரா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தமிழில் இந்தப் படத்திற்கு மிதமான வரவேற்பே கிடைத்தாலும், தெலுங்கில் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்துள்ள நடிப்பை பாராட்டி, தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் மேடைSpeechகளில் புகழ்ந்து வருகின்றனர். இதில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, “எங்களால் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது. ஆனால் தனுஷ் மிகுந்த தைரியத்துடன் இப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்க வேண்டும்” என பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில், ‘குபேரா’ திரைப்படம் இதுவரை பெற்றுள்ள மொத்த வசூலை படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படம் தற்போது ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகவும், அந்த தகவலை ஒரு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top