Connect with us

ஆண்ட்ரியா நடிப்பில் உருவான “கா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

ஆண்ட்ரியா நடிப்பில் உருவான “கா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

ஆண்ட்ரியா நடிப்பில் உருவான “கா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. தனது அபார திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் உருவான படம் தான் ‘கா’.

இயக்குநர் நாஞ்சில் இயக்கி உள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், ‘சூப்பர் டீலக்ஸ்’ பட புகழ் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாட்கள் தான் சென்றதே தவிர படம் வெளியானபாடில்லை இந்தா வந்துவிடும் அந்தா வந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் இப்படம் ஒருவழியாக இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top