Connect with us

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தின் சிறப்பான அப்டேட் வெளியானது..!!

Cinema News

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தின் சிறப்பான அப்டேட் வெளியானது..!!

லோகேஷ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் ‘தலைவர்171’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் முதல் லியோ வரை இவர் இயக்கிய 5 படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹாட் அடித்தது.

இதையடுத்து இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் தான் தலைவர் 171 . சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வரும் ஏப்ரல் 22ல் வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் இருந்து நடைபெறும் என்றும் தலைவர் படத்தை முடித்த கையோடு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top