Connect with us

விஜய் அதற்கு செட் ஆகவே மாட்டார்..அஜித்தை புகழ்ந்து பேசிய இயக்குனர் அமீர்!

Cinema News

விஜய் அதற்கு செட் ஆகவே மாட்டார்..அஜித்தை புகழ்ந்து பேசிய இயக்குனர் அமீர்!

விஜய்-அஜித் என்று சொல்லும்போதே ரசிகர்களுக்கு சண்டை வர ஆரம்பித்து விடும்….பெயர் வரிசையில் போடுவதிலேயே யார் பெயர் முதலில் போட வேண்டும் என்ற நிலை தொடங்கிவிடும்…அப்படி ஒரு நிலை தான் இருக்கின்றது…

இன்றும் கூட வாரிசு-துணிவு வசூல் பிரச்சனை அதிகமாக இருந்து தான் வருகிறது…யார் ஜெயித்தார்கள் என்று…ரசிகர்கள் சண்டை ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்…இவர்கள் இதற்கு விளக்கம் கொடுக்காமல் வேலையை செய்து வளர்கின்றனர்…

துணிவு முடித்த அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்க விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்…

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இணையத்தில் மிகவும் ஹாட் டாப்பிக்காக இருக்கும் அமீர் ஒரு கருத்தை வெளியிட அது ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது…அவரின் பருத்திவீரன் பிரச்சனை ஓடி வருகின்றது இந்நிலையில் அவர் அஜித்தை பற்றி சொல்லியது வைரல் ஆகி வருகின்றது…

அதாவது அமீர் இயக்கிய ஆதிபகவான் படம் தோல்வியடைந்தது ஆனால் அந்த படத்தில் அஜித் நடித்திருந்தால் இன்னும் மிகவும் பெரிதளவில் மாஸ் மற்றும் கிளாஸ் லெவலில் இருந்திருக்கும்…

ஏனெனில் அஜித்தால் இரண்டு விதமான நடிப்பையும் கொடுக்க முடியும் அவர் அப்படி பட்டவர் என சொல்லிவிட்டு விஜய்யால் மாஸ் நடிப்பை மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்…அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top