Connect with us

DAY IS DONE : அமரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு – வீடியோவுடன் அறிவித்த படக்குழு..!!

Cinema News

DAY IS DONE : அமரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு – வீடியோவுடன் அறிவித்த படக்குழு..!!

எஸ்.கே.வின் அசத்தலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அழகிய வீடியோ மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் அமரன்.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராணுவ வீரராக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயனின் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் .

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது .

இப்படத்தின் டீஸர் கடந்த சில சில நாட்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்தியது .

இந்நிலையில் இப்படத்தின் குட்டி அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . சென்னை காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அமரன் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அழகிய வீடியோ மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top