Connect with us

பாலிவுட்டில் நுழையும் ‘அமரன்’ இயக்குனர்: கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு!

Featured

பாலிவுட்டில் நுழையும் ‘அமரன்’ இயக்குனர்: கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு!

சிவகார்த்திகேயனின் அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்த நிலையில், அதன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தொடர்ந்து பாராட்டுகள் பெற்று வருகிறார். இந்த வெற்றிக்கு அடுத்ததாக, தனுஷ்-ஐ வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போகிறார்.

இதற்கிடையில், பாலிவுட்-இல் நுழையும் வாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அமரன் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை பார்த்த பிறகு, பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஹிந்தி படம் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த படம் பன் இந்தியா படமாக உருவாகப்போகிறது என்றும், 2025 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top