Connect with us

நான் நடிகை என்பதை என் கணவருக்கு தெரியாது! அமலா பால் உருக்கமான பகிர்வு..

Featured

நான் நடிகை என்பதை என் கணவருக்கு தெரியாது! அமலா பால் உருக்கமான பகிர்வு..

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின், விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை அமலா பால், 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இந்த நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அமலா பால், தனது கணவர் குறித்து மனம் திறந்து பேசினார்.

அவர் கூறியதாவது: “முதன் உதலில் நானும் என் கணவர் கோவாவில் சாதித்தோம். அவர் குஜராத்தி என்றாலும் கோவாவில் தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்திய படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் நான் ஒரு நடிகை என்பதே அவருக்கு தெரியாது. நானும் அதை காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்கள் பின்தான் அவருக்கு தெரிய வந்தது.

நான் கர்ப்பகாலத்தில் இருக்கும்போது தான் என்னுடைய படங்களை பார்த்தார். அவருக்கு விருது நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பெட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாக பார்த்தார்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top