Connect with us

கெனிஷாவுடன் உறவு! நான் பட்ட கஷ்டங்களை சொல்லவா..? – ரவி மோகனின் அதிர்ச்சி அறிக்கை!

Featured

கெனிஷாவுடன் உறவு! நான் பட்ட கஷ்டங்களை சொல்லவா..? – ரவி மோகனின் அதிர்ச்சி அறிக்கை!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் கெனிஷா என்ற பெண்மணியுடன் நெருக்கமாக பழகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில், ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் உறுதியாகும் நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்தார்.

பல சினிமா பிரபலங்களும் ஆர்த்திக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். இதற்கிடையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறுகையில், ரவி மோகன் தனது கேரளத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த கெனிஷாவுக்காக ரூ. 10 கோடி மதிப்பிலான வீட்டை மும்பையில் வாங்கி கொடுத்துள்ளார் என்றும் தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து, ரவி மோகன் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் காயங்களை புரியாமலே என்னை குற்றம் கூறுவதால் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் என் வாழ்க்கையை கட்டியெடுத்தேன். சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நியாயத்தைப் பெற நான் சட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன்.”

மேலும் அவர் கூறுகிறார்: “முதுகில் குத்தப்பட்ட பிறகு, இப்போது நெஞ்சிலும் குத்தப்பட்டுள்ளேன். என் குழந்தைகளை வைத்து தவறான சித்தரிப்பு மூலம் பணம் சம்பாதிக்க முயற்சி நடக்கிறது. என் குழந்தைகளை பார்க்க முடியாமல் பாதுகாப்பாளர்கள் மூலமாக தடுக்கப்படுகிறேன்.”

அதே அறிக்கையில், கெனிஷாவை பற்றி அவர் உருக்கமாக கூறியுள்ளதாவது: “கெனிஷா எனக்கு ஒரு உயிர்நாடி. நான் உடைந்து கிடந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வர தைரியத்துடன் என்னை நடத்தி கொண்டுபோனவர். என் பயணம், ஆவணங்கள், வீடு, எனது அடிப்படை கண்ணியம் அனைத்தும் பறிக்கப்பட்ட போது கூட, கெனிஷா எனக்காக நின்றார்.” அவர் ஒரு தெரபிஸ்ட்டும் கூட. ஆனால் சட்ட விதிமுறைகளை மதித்து, என் தோழியாக மட்டும் இருந்தார். என் வாழ்நாளில் ஒளியாக வந்தவர். “என்னை மதிப்பவர்கள், கெனிஷாவையும் மதிக்க வேண்டும். என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தக் லைப் படத்தில் குஷ்பு மகள் பணியாற்றியதைப் பார்த்தீர்களா? குஷ்புவின் உருக்கமான நன்றி..

More in Featured

To Top