Connect with us

இனி இது போன்று நடக்கக் கூடாது!” – கடும் கண்டனம் தெரிவித்த அஜித் குமார்..

Featured

இனி இது போன்று நடக்கக் கூடாது!” – கடும் கண்டனம் தெரிவித்த அஜித் குமார்..

முன்னணி நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தயாரிப்பு நிறுவனமாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் செயல்பட்டது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில், நடிகர் அஜித் குமார் தனது கெரியரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதோடு, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அஜித் குமார் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். “இனி இது போன்று ஒரு செயல் நடக்கக்கூடாது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நான் மனதார பிரார்த்திக்கிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அனைவரும் அமைதியாக வாழ வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top