Connect with us

விஜய்யின் GOAT படத்தில் அஜித்தா..? வெங்கட் பிரபு டுவிட்டால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema News

விஜய்யின் GOAT படத்தில் அஜித்தா..? வெங்கட் பிரபு டுவிட்டால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘GOAT ’ படத்தை வெங்கட் பிரபு மும்மரமாக இயக்கி வரும் நிலையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்துடன் வெங்கட் பிரபு போட்டுள்ள ட்வீட் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

ஸ்டைலிஷ் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் படமே தீ கோட் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

அப்படியே இந்த பக்கம் நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் உள்ளார் . இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று நடிகர் அஜிகுமாரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அஜித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டுவீட்டை வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் கோட் படத்தில் அஜித் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இல்லாதவர்களை பார்த்து சிரிப்பவன் நான் அல்ல.. மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்..

More in Cinema News

To Top