Connect with us

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல் ஹக் திடீர் ஓய்வு அறிவிப்பு!”

Sports

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல் ஹக் திடீர் ஓய்வு அறிவிப்பு!”

ICC 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல்-ஹக் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.

இந்தத் தொடரில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் அரைஇறுதி வாய்ப்பை இழந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் 8 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.

அதேநேரத்தில் 20 ஓவர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களையும், 27 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

Advertisement
 

Trending

 
Advertisement
To Top