Connect with us

ADMK : ஜன9-ல்‌அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!

ADMK

Featured

ADMK : ஜன9-ல்‌அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!

சென்னையில் ஜனவரி 9ஆம் தேதி அதிமுக ( ADMK ) மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகப்‌ ( ADMK ) பொதுச்‌ செயலாளர்‌, மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, தமிழ்‌நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ “புரட்சித்‌ தமிழர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ தலைமையில்‌, தலைமைக்‌ கழக புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மாளிகையில்‌, 9.1.2024 – செவ்வாய்‌ கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.

Also Read : https://www.cinemamedai.com/double-bomb-blast-in-iran/

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

கழகப்‌ பொதுச்‌ செயலாளர்‌, சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, தமிழ்‌நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top