Connect with us

சினிமாவுக்கு முன்பே சூப்பர்ஸ்டாருடன் த்ரிஷா நட்பு? பலருக்கும் தெரியாத ரகசியம்..

Featured

சினிமாவுக்கு முன்பே சூப்பர்ஸ்டாருடன் த்ரிஷா நட்பு? பலருக்கும் தெரியாத ரகசியம்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாம் த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா, மகேஷ் பாபு, கமல், சிரஞ்சீவி என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். 42 வயதானாலும், இன்று வரை பிஸியான நடிகையாக திகழ்கிறார். அதேசமயம், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது த்ரிஷா நடிக்கும் “சூர்யா 45” படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், மகேஷ் பாபு குறித்து த்ரிஷா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் த்ரிஷா கூறியதாவது: “மகேஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவர் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்கிறார். பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், மகேஷை நான் கல்லூரி நாட்களிலிருந்தே அறிவேன். அவர் சென்னையில் படித்து வந்தார். எங்களுக்கிடையில் பொதுவான நண்பர்கள் இருந்தனர்.

அந்த நண்பர்களின் மூலம் தான் நாங்கள் பழக தொடங்கினோம். அப்போது நாங்கள் நடிகர்களாகப்போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. அது வெறும் ஹாய்-பாய் நட்பாக இருந்தது.” இந்தக் கருத்துகள் தற்போது மீண்டும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top