Connect with us

“தளபதி விஜய்யுடன் சேர்ந்த அதிர்ஷ்டம்..! தீடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை த்ரிஷா! இதுதான் காரணமா?!”

Cinema News

“தளபதி விஜய்யுடன் சேர்ந்த அதிர்ஷ்டம்..! தீடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை த்ரிஷா! இதுதான் காரணமா?!”

மணிரத்னத்தின் வரலாறு படமான பொன்னியின் செல்வன் 1 & 2 படங்களுக்குப் பிறகு, தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் கடல் போன்ற ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். இவர் கடைசியாக விஜய்யுடன் சேர்ந்து LEO படத்தில் நடித்து இருந்தார். LEOவில், த்ரிஷா மற்றும் தளபதி விஜய் ஒரு டீனேஜ் மகன் மற்றும் ஒரு மகளுடன் மனைவியாக நடித்தார்.

இந்த காம்போ ஐந்து படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் 12 ஆண்டுகள் கழித்து ஒன்றாக நடித்து இருக்கிறார்கள். LEO படத்தின் வெற்றிக்குப் பிறகு, த்ரிஷா, அஜீத் குமாரின் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். அது தவிர உலகநாயகன் கமல் ஹாசனின் 234 ஆவது உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

நடிகை த்ரிஷா ஒரு படத்திற்கு ரூ 1.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். LEO படத்திற்கு பிறகு த்ரிஷா, கமல் ஹாசன், அஜித் உள்ளிட்ட பிற நடிகர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். LEO படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா ரூ. 4 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியாதாக சொல்லப்படுகிறது.

அப்படம் வெற்றியடைந்த நிலையில் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதன் படி, நடிகை த்ரிஷா அடுத்தடுத்து கமல், அஜித் படங்களில் நடிக்க சுமார் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் என்று சில வட்டாரங்கள் சொல்கிறது. இருப்பினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

த்ரிஷா வரலாறு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்திய த்ரிஷா, LEO படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கினார். ஒரே வருடத்தில் கிடைத்த வெற்றியால் த்ரிஷா தனது சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகமாக கேட்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'வேட்டையன்' படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

More in Cinema News

To Top