Connect with us

“நடிகர் ராம் சரணின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் பிரபல நடிகை?! யார் தெரியுமா?”

Cinema News

“நடிகர் ராம் சரணின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் பிரபல நடிகை?! யார் தெரியுமா?”

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை புச்சி பாபு இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவி சம்மதித்து உள்ளதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் AR ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கிராமத்து பின்னணியில் விளையாட்டை மையமாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பான் இந்திய திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top