Connect with us

விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் – முக்கிய பணியில் இறங்கிய நடிகை ரித்திகா சிங்..!!

Cinema News

விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் – முக்கிய பணியில் இறங்கிய நடிகை ரித்திகா சிங்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ’வேட்டையன்’ படத்தில் தனது முக்கிய பணியை செய்ய நடிகை ரித்திகா சிங் முனைப்புடன் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது .

இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட பணிகளில் படுக்குழு இறங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கமிட்டாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரித்திகா சிங் தற்போது தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேட்டையன் படத்திற்காக டப்பிங் பணிகளில் நடிகை ரித்திகா சிங் இறங்கியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top