Connect with us

இனி கவர்ச்சியான ரோல்களில் நடிக்க மாட்டேன் – இயக்குநர்களுக்கு கண்டிஷன் போட்ட நமிதா..!!

Cinema News

இனி கவர்ச்சியான ரோல்களில் நடிக்க மாட்டேன் – இயக்குநர்களுக்கு கண்டிஷன் போட்ட நமிதா..!!

திருமணத்திற்கு பின் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நடிகை நமிதா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் திரைப்பட இயக்குநர்களுக்கு பல கண்டீஷன்களை போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களை மாச்சான்ஸ் என்ற ஒரே வார்த்தையில் மயக்கியவர் தான் நடிகை நமீதா. சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் நமீதாவுக்கு இருக்க பட வாய்ப்புகளும் திகட்ட திகட்ட வந்தது .

படத்திற்கு படம் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் திடீரென படங்களில் நடிக்காமல் திருமணம் செய்துகொண்டு அப்படியே செட்டில் ஆகிவிட்டார் . தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாக உள்ள நமிதா அரசியலிலும் களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில் திரைப்படங்களில் வெகு நாட்களாக நடிக்காமல் இருந்து வந்த நமிதா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நமிதா கூறியதாவது :

எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடர்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஒரு படத்தில் வில்லி ரோலில் நடித்து வருகிறேன். இனி கவர்ச்சியான ரோல்களில் நடிக்கமாட்டேன் என்று நமிதா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜீவா நடிப்பில் உருவான பிளாக் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top