Connect with us

எல்லா இனத்திலும் என் நண்பங்கைங்க இருக்காங்க..! ‘வட்டார வழக்கு’ படத்தின் டிரைலர் வெளியானது!

Cinema News

எல்லா இனத்திலும் என் நண்பங்கைங்க இருக்காங்க..! ‘வட்டார வழக்கு’ படத்தின் டிரைலர் வெளியானது!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாதி கொடுமைகள் குறித்த படம் வந்துள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக ’வட்டார வழக்கு’ படம் இருந்தாலும் இந்த படத்தின் கதை, காட்சி அமைப்புகள், நட்சத்திரங்களின் நடிப்பு வித்தியாசமாக உள்ளது.

வரும் 29ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கண்ணுசாமி ராமச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சுமார் மூன்று நிமிடங்கள் உள்ளது.

ஒரு கிராமத்தில் இரண்டு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பகை,அதனால் ஏற்படும் ஜாதி வெறி பிரச்சனைகள், போலீஸ், நீதிமன்றம் என அந்த பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சனையை மிகவும் இயல்பாக இயக்குனர் பதிவு செய்துள்ளார் என்பது ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது.

இசைஞானியின் பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய வலுவானதாக கருதப்படுகிறது. மேலும் ‘நம்ம கைய நம்மலே வெட்டிகிட்டு நாம யாரை கைய காட்டினாலும் கோர்ட் அதத்தான் நம்பும், சாமியே வந்து சாட்சி சொன்னாலும் சட்டம் அதை நம்பாது..’ போன்ற வசனங்கள் இந்த படத்தின் ஹைலைட்டாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சட்டென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் - அரவணைப்புடன் அறிவுரை கூறிய எம்.எஸ்.தோனி..!!

More in Cinema News

To Top