Connect with us

எதிர்பாராததை எதிர்பாருங்கள் – பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா..!!

Featured

எதிர்பாராததை எதிர்பாருங்கள் – பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா..!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா போட்டியிடவுள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் நாடே தற்போது திருவிழா போல் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் . அந்த வகையில் தேசிய கட்சியான பாஜகவும் தங்கள்து வேட்பாளர் பட்டியலை தனித்தனியாக பிரித்து வெளியிட்டு வருகிறது.

இதில் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக மக்களின் பிரச்சனைகளுக்கு விடாமல் குரல் கொடுத்து வரும் கங்கனா இதற்காக பல சர்ச்சைகளில் சிக்கி படாத அவஸ்தை பட்டார் .

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத் போட்டியிட போவதாக பாஜக அறிவித்துள்ளது . மண்டி தொகுதி நடிகை கங்கனாவின் பிறந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இறுதியில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹன்சிகா மோட்வானி விவாகரத்து! 4 ஆண்டில் முடிந்த திருமணம்

More in Featured

To Top