Connect with us

RCB vs PBKS : களத்தில் கலக்கிய கோலி – தினேஷ் கார்த்திக் – முதல் வெற்றியை பெற்றது ஆர்சிபி அணி..!!

Featured

RCB vs PBKS : களத்தில் கலக்கிய கோலி – தினேஷ் கார்த்திக் – முதல் வெற்றியை பெற்றது ஆர்சிபி அணி..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் – ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர் நிதானமாக தங்களது ஆட்டத்தை தொடங்கிய இந்த ஜோடி அணிக்கு தேவையான ரன்களை எடுத்து வந்த நிலையில் சிராஜ் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் அவுட்டானார்.

அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங், தவானுடன் கை கோர்க்க இந்த ஜோடியாவது நிலைக்குமா என எதிர்பார்த்த நிலையில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் பிரப்சிம்ரன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டமிழக்க . அடுத்த ஓவரில் தவானும் 45 ரன்களில் விக்கெட்டானார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 176 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி களமிறங்கினர் . முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசி கோலி அதிரடி காட்ட ரசிகர்களையோ மைதானத்தையே அலறவிட்டனர் . ஆனால் மறுபக்கம் கேப்டன் டூப்ளசி 3 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த கேமரூன் கிரீனும் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார் கோலியுடன் கைகோர்த்து 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக விளையாடிய பட்டிதார் 18 ரன்களில் ஆட்டமிழக்க மேக்ஸ்வெல்லும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார் .

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுப்பக்கம் அதிரடியாக விளையாடிய கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் வீழ்ந்தார்.

இதையடுத்து கடைசி நேரத்தில் களம் கண்ட தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரட்ட 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top