Connect with us

நடிகர்கள் மீது அவதூறு பரப்புவதால் பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை..

Featured

நடிகர்கள் மீது அவதூறு பரப்புவதால் பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை..

போதைப் பொருள் விவகாரம் கோலிவுட்டை கலக்கும் நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மூத்த பத்திரிகையாளர், நடிகர் மற்றும் யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் பல முன்னணி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அதோடு, ஆரம்பத்திலேயே சில நடிகைகள் சினிமாவில் வாய்ப்புகளை பெற அட்ஜஸ்ட்மென்ட் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இந்தப்பற்றிய பல அதிருப்திகள் மற்றும் தகவல்களை அவர் கூறி வருகிறார். இதனால் சில நடிகைகள், பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக சில வழக்கறிஞர்கள் வழக்கு தொடரும் முயற்சியில் இருப்பது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பயில்வான் ரங்கநாதன் கூறியதன்படி, பல்வேறு மீடியா துறைகளில் பணியாற்றியவர் என்பதால் தவறான தகவல் சொல்லவில்லை என்றும், எந்த நடிகர், நடிகையையும் அவமரியாதையாக பேசியதில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், சினிமா துறையில் நடந்த சம்பவங்களை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் தேவையற்ற அவதூறுகளை பரப்புவதை தடை செய்ய கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு மீறி நடிகர்களை குற்றசாட்டும் வகையில் அவதூறு பரப்பினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்கள் மாத மாதம் தீவிர உடல் பரிசோதனை போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் யூடியூபர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹனிமூன் பற்றியப் பதிவால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய த்ரிஷா!

More in Featured

To Top