Connect with us

“அது நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது..! நடிகர் விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!”

Cinema News

“அது நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது..! நடிகர் விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!”

நடிகர் விஷால் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரிலீஸ் ஆகி 18 ஆண்டுகள் ஆகியதை அடுத்து இந்த மாயாஜால வெற்றி கிடைத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு வைரலாகி வருகிறது.

இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அதாவது 18 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளித்திரையில் ’சண்டக்கோழி’ என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக என் வாழ்க்கை உருவாகியது. தற்போது நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

இன்று வரை அனைவராலும் பொழிந்த அன்பும் பாசமும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் எனக்கு தொடர்ந்து கொண்டிருப்பது கொண்டிருப்பதற்கு இந்த படம் ஒரு முக்கிய காரணம். பார்வையாளர்களில் ஒருவனாக இருந்த என்னை இந்த படம் திரும்பி பார்க்க வைத்தது.

என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குனர் லிங்குசாமி மற்றும் கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இறுதியாக பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்த ரசிகர்களை நான் கடவுளாக பார்க்கிறேன். அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

என் தந்தை ஜிகே ரெட்டி, எனது குரு அர்ஜுன் சார் ஆகியோர்களின் கனவை தொடர்வேன். நன்றி மட்டும் போதாது என்று எனக்கு தெரியும்’ என அவர் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top