Connect with us

“அப்பா வேற.. நான் வேற.. அவர் பேரு எனக்கு வேண்டாம்! நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி பேச்சு!”

Cinema News

“அப்பா வேற.. நான் வேற.. அவர் பேரு எனக்கு வேண்டாம்! நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி பேச்சு!”

நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகம் ஆக இருக்கிறார். இந்தத்திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சி இயக்குநரான அனல் அரசு இருக்குகிறார். இந்தப்படத்திற்கு ‘ஃபீனிக்ஸ் வீழான்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சூர்யா, நானும் ரெளடிதான், சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களில், சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், இந்தப்படத்தில் முதன்முறையாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் பூஜை இன்றைய தினம் நடந்தது. அப்போது செய்தியாளர்களை சூர்யாவும், அனல் அரசுவும் சந்தித்தனர்.

சூர்யா பேசும் போது, “நான் இந்தப்படத்தில் அறிமுகமாகிறேன் என்பதில் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. எனக்கு ஆரம்பத்தில் இருந்து, சண்டை தொடர்பான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது மிகுந்த ஆசை. அதேபோல, ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்பதும் ஆசையாக இருந்தது. அந்த ஆசை அனல் அரசு மாஸ்டர் வழியாக நடப்பது எனக்கு சந்தோஷம். திரைத்துறையை பொருத்தவரை, நான் என்னுடைய அப்பாவின் பெயரில் வர வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

அப்பாவிற்கு சாப்பாடு எடுத்து செல்வதற்காக நான் ஒரு முறை படப்பிடிப்பிற்கு சென்று இருந்தேன். எனக்கு சண்டைக் காட்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆகையால் அந்த படப்பிடிப்பில் நடைபெற்றுக்கொண்டிருந்த சண்டைக்காட்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு மாஸ்டர் இருந்தார். அவருக்கு ஒரு வணக்கம் வைத்தேன். அந்த நேரம் அவர் முகத்தில் நான் பட்டிருக்கிறேன். அவருக்கு என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதில் நான் என்ன செய்ய முடியும்.

நான் நடிக்க செல்கிறேன் என்று சொன்னபோது, எனது அப்பா என்ன சொன்னார் என்று கேட்கிறீர்கள், “இந்த விஷயத்தில் அப்பா வேற; நான் வேற; அதனால் தான் இந்தப்படத்தின் டைட்டில் கார்டில் சூர்யா என்று மட்டும் போட்டு இருக்கிறார்கள். சூர்யாவுடன் விஜய்சேதுபதி இல்லை. நான் நடிக்க வந்தது உண்மையில் அப்பா, அம்மாவிற்கு சந்தோஷம்தான்.

இருப்பினும் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. இதை என்னுடைய அப்பாவிடம் சொன்னேன், அவர் பாத்துக்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய அனல் அரசு மாஸ்டர், மகன் அறிமுகமாகும் பட நிகழ்விற்கு விஜய்சேதுபதி வரவில்லையே என்று கேட்கிறீர்கள்? .. “ அவர் வருவதாகத்தான் இருந்தது. ஆனால், அவர் மலேசியாவில் ஷூட்டிங்கில் மாட்டிக்கொண்டார். காலையில் வீடியோ காலில் வந்து அனைவருக்கும் வாழ்த்துகள் சொன்னார்.” என்று பேசினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘கள்வன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top