Connect with us

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த பட First Look Poster வெளியாகி வைரல்..!

Cinema News

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த பட First Look Poster வெளியாகி வைரல்..!

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தமிழ் திரை உலகின் இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் வெளியானது. இதில் ஒரு பகுதியை இயக்கியவர் பிஜாய் நம்பியார் என்பதும் ’எதிரி’ என்ற டைட்டில் கொண்ட அந்த பகுதியில் விஜய் சேதுபதியின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிஜாய் நம்பியாரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது இந்த படத்திற்கு ’போர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் நாயகர்களாக அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சஞ்சனா நடராஜன் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top