Connect with us

தொடர் விமர்சனங்களால் அதிர்ச்சி.. கட்சியின் பெயரை மாற்றிய நடிகர் விஜய்?

Vijay_POlitics_TVK

Featured

தொடர் விமர்சனங்களால் அதிர்ச்சி.. கட்சியின் பெயரை மாற்றிய நடிகர் விஜய்?

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் மாற்றம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தீயாய் ஒரு தகவல் பரவி வருகிறது.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

விஜய் கட்சி தொடங்குவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வந்தாலும், அவரை விரும்பாதவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். மேலும், கட்சியின் பெயரில் எழுத்துப் பிழை உள்ளதாகவும், வெற்றி என்ற வார்த்தையுடன் “க்” என்ற ஒற்றெழுத்து வரவேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பாடம் எடுக்க ஆரம்பித்தனர்.

இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இதில் உள்ள தவறை உணர்ந்த விஜய் தரப்பு கட்சியின் பெயரில் “க்” சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என செயல்பட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், கட்சியினர் வெளியிடும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் என போடா ஆரம்பித்துள்ளனர். கட்சித் தலைமையிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Featured

To Top