Connect with us

சந்தோஷ் நாராயணன் இசைக்கச்சேரியில் உருகி உருகி பாடிய நடிகர் சித்தார்த் – வைரல் வீடியோ

Cinema News

சந்தோஷ் நாராயணன் இசைக்கச்சேரியில் உருகி உருகி பாடிய நடிகர் சித்தார்த் – வைரல் வீடியோ

சந்தோஷ் நாராயணன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்ற இசைக்கச்சேரியில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு உருகி உருகி பாடிய வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் சித்தார்த்.

இதையடுத்து ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, ஜிகர்தண்டா, எனக்கும் ஒருவன் என தமிழில் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல் கடந்த 2012ல் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சந்தோஷ் நாராயணன். இதையடுத்து பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறைவி, இறுதிச்சுற்று, கொடி, கபாளி, காலா, மேயாத மான், பரியேறும் பெருமாள், வட சென்னை, ஜிப்ஸி என பல படங்களில் சூப்பர்டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை நாட்டில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு அவர் தயாரித்து நடித்த சித்தா படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அசத்தியுள்ளார் .

பல ஆயரம் ரசிகர்கள் மத்தியில் அருமையாக சித்தார்த் பாடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Cinema News

To Top