Connect with us

“வெற்றி என்ற வார்த்தையை சொல்ல இத்தனை ஆண்டுகளாகிவிட்டது” – நடிகர் சாந்தனு உருக்கம்

Cinema News

“வெற்றி என்ற வார்த்தையை சொல்ல இத்தனை ஆண்டுகளாகிவிட்டது” – நடிகர் சாந்தனு உருக்கம்

அசோக் செல்வன் மற்றும் சாந்தனுவின் மிரட்டலான நடிப்பில் உருவான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படம் குறித்து நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் .

ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மீடியம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படமா நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் .

இதுகுறித்து நடிகர் சாந்தனு போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

மிகவும் உணர்வூப்பூர்வமாக உள்ளது. வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கு எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என 5,600 நாட்கள் ஆகியுள்ளன.

இது உங்களால் தான். உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓடவைத்துள்ளது. இதற்காக நான் நன்றிகடன் பட்டுள்ளேன் என மிகவும் உருக்கமாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top