Connect with us

நடிகர் மணிகண்டனின் நெகிழ்ச்சியான பயணம்: 4 ஆண்டுகளின் கஷ்டம்..

Featured

நடிகர் மணிகண்டனின் நெகிழ்ச்சியான பயணம்: 4 ஆண்டுகளின் கஷ்டம்..

இன்றைய தமிழ் சினிமாவின் சென்சேஷனல் ஹீரோவாக இருக்கும் மணிகண்டன், விக்ரம் வேதா, காதலும் கடந்துபோகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரம் நடித்தவர். பின் ஜெய் பீம் படத்தில் முக்கிய ரோல் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதன் பின்னர், குட் நைட், லவ்வர், மற்றும் சமீபத்தில் குடும்பஸ்தன் படங்கள் ஆகியவை வெற்றியடைந்தன. மணிகண்டனின் பேட்டிகள் எப்போதும் அனைவரையும் மோட்டிவேட் செய்யும் வகையில் இருக்கும்.

ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசும் அவர், “எங்க வீடு கிரகப்பிரவேசம் பண்ணி இருந்தோம். அப்போ என் அப்பா என் பிரண்ட்ஸ் கிட்ட, நான் பெத்தேன் படிக்க வைத்தேன் அவ்வளவுதான். மீதி எல்லாம் நீங்க தான் பாத்துக்கிறீங்க, அவன பாத்துக்கோங்க என்று சொன்னார்” என கூறினார்.

“என்னுடைய கேரியர் செலக்சன்ல இருந்து, சினிமாவிற்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், ‘ரொம்ப போலியாக நீ ட்ரை பண்ணா உனக்கு வரும்’ என்று சொல்லாமல், ‘இல்ல உனக்கு வரவில்லை, நீ நிறைய கத்துக்கணும்’ என்று என் பிரண்ட்ஸ் மோட்டிவேட் பண்ணாங்க” என அவர் கூறினார்.

“அதே மாதிரி நான் நடுவுல 4, 5 வருஷம் எங்க வீட்ல சுத்தமா காசு வாங்க கூடாது என்று முடிவு பண்ணிட்டேன். எனக்கு அப்போ வேலை கூட இல்லை. அந்த நாலு வருஷமும் என் பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தினமும் காசு கொடுப்பாங்க” என அவர் மேலும் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top