Connect with us

அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

Featured

அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

இயக்குனர் அட்லீ யின் “ஜவான்” படம் 1000 கோடி வசூலித்து பெரிய சாதனை படைத்துள்ளது. இப்போது, அவருடைய அடுத்த படம் யாருடன் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

முன்பு அட்லீ சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல் வந்தது. அந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அட்லீ அந்த படத்திற்காக கேட்ட பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால், சன் பிக்சர்ஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்போது, அட்லீ தனது அடுத்த படத்திற்கு தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூனுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்த படத்தை தயாரிக்க தில் ராஜு உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறார்கள்.

இந்த படத்திற்காக அட்லீ 100 கோடி சம்பளமாக கேட்டதாகவும், இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ப்ராஜெக்ட் உறுதியானால், விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top