Connect with us

அடுத்தடுத்து வந்த வெற்றி படங்கள் – அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்..!!

Cinema News

அடுத்தடுத்து வந்த வெற்றி படங்கள் – அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்..!!

அடுத்தடுத்து வந்த வெற்றி படங்களால் நடிகர் கவின் அவரது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில்ந் நடித்து பேமஸ் ஆனவர் கவின்.

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட கவினுக்கு ஹீரோவாக நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தது. அதில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து கவின் நடித்து வருகிறார் .

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடித்த முதல் திரைப்படம் லிஃப்ட். ஹாரர் த்ரில்லர் படமான இதில் நம்ப கவின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த படமோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது .

லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின் கவின் நடிப்பில் அடுத்ததாக வெளியான திரைப்படம் டாடா. இந்த படமும் கவினுக்கு மாபெரும் வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

இந்நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் கவின் கமிட்டாகி உள்ளதால் அவரது தனது சம்பளத்தை ரூ. 6 கோடி வரை உயர்த்தி உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த சம்பள தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மறுபக்கம் அனைவர்க்கும் பிடிக்கும் நாயகனாக வலம் வரும் நடிகர் கவினுக்கு இந்த சம்பளம் நிச்சயம் கொடுக்கலாம் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு..!!!

More in Cinema News

To Top