Connect with us

நடிகர் தனுஷின் 51-வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வெளியானது.!!

Cinema News

நடிகர் தனுஷின் 51-வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வெளியானது.!!

நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் அவரது 51-வது படத்தின் தலைப்பு மற்றும் அதன் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான படம் கேப்டன் மில்லர் எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூலை ஈட்டி வெற்றி படமாக உருமாறியது.

இதையடுத்து நடிகர் தனுஷ் பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் . அந்தவகையில் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.

தமிழ் மட்டும் தெலுங்கில் உருவாகும் இப்படம் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்க படுவதாக கூறப்படுகிறது .

இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தையும், படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

கிழிந்த சட்டை, அழுக்கடைந்த தோற்றத்தில் மீசையும், தாடியுமாக தனுஷ் நிற்க அவருக்கு பின்புறம் சிவன், பார்வதியின் படங்கள் உள்ளதால் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்போதே சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர் .

இதோ அந்த குபேரா படத்தின் 1st லுக் வீடியோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது 'மங்காத்தா' திரைப்படம்..!!!

More in Cinema News

To Top