Connect with us

அடி தூள் : தனது அடுத்த படம் குறித்து சீயான் விக்ரம் வெளியிட்ட தரமான போஸ்டர்

Cinema News

அடி தூள் : தனது அடுத்த படம் குறித்து சீயான் விக்ரம் வெளியிட்ட தரமான போஸ்டர்

சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் குறித்த சிறப்பான தரமான போஸ்டர் வெளியாகி செம வைரலாகி வருகிறது .

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாக உள்ள திரைப்படம் தான் ‘சீயான் 62’ .

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் சேர்ந்து , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் யார் கதாநாயகி என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தில் சீயான் விக்ரமுடன் சார்பட்டா நாயகி துஷாரா விஜயன் கைகோர்த்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் சீயான் 62 படத்தின் புதிய போஸ்டரை தற்போது பகிர்ந்துள்ள சீயான் விக்ரம் லோடிங் என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல்வரின் காலை உணவுத்திட்ட சமையல் கூடங்களாக மாறும் அம்மா உணவகங்கள் - டிடிவி தினகரன் கண்டனம்

More in Cinema News

To Top