Connect with us

பல வருட காத்திருப்புக்கு கிடைத்த பலன் – வசூலில் சாதனை படைக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

Cinema News

பல வருட காத்திருப்புக்கு கிடைத்த பலன் – வசூலில் சாதனை படைக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

பிரித்விராஜ் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் தற்போது தாறுமாறான வசூல் சாதனைகளை படைத்தது வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடிக்க இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

16 வருட போராட்டத்திற்கு பின் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ. 98 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், நாளை 100 கோடி கிளப்பில் இணைவதும் மட்டுமல்லாமல் இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் பிரித்விராஜ் அவர்களின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடின இலக்கை கொடுக்குமா கொல்கத்தா - டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top