Connect with us

நெல்லையில் காதலி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை..!!

Featured

நெல்லையில் காதலி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை..!!

நெல்லையில் பட்டப்பகலில் காதலி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகை குளத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி தீபக் ராஜா. 30 வயதாகும் இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என கூறப்படுகிறது .

ரவுடி தீபக் ராஜாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே உள்ள ஹோட்டலுக்கு ரவுடி தீபக் ராஜா உணவருந்த சென்றுள்ளார்.

அப்போது நீண்ட நேரமாக தீபக் ராஜாவை பின்தொடர்ந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹோட்டல் வெளியில் மக்கள் கூட்டம் இருந்த நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது . இதையடுத்து ரத்தவெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபக் ராஜாவின் உடல் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

நெல்லையில் பட்டப்பகலில் காதலி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Featured

To Top