Connect with us

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

Featured

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறும் டி20 தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது . இந்நிலையில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இந்திய அணியின் ரன் குவிப்பை தடுக்கும் வகையில் பந்துவீச தென்னாப்பிரிக்கா அணி ஆயுத்தமாகி வருகிறது.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தங்களது பலத்தை காட்டி வரும் நிலையில் இன்று நடைபெறும் இந்த விறுவிறுப்பான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினிக்கு 74 வயசு… ஆனா கூலி படத்தில் செய்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா?

More in Featured

To Top