Connect with us

“தடுப்பு சுவர் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் பலி ” – வேதனை தெரிவித்த தினகரன்

Featured

“தடுப்பு சுவர் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் பலி ” – வேதனை தெரிவித்த தினகரன்

உதகை அருகே கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணி நடைபெற்ற பொது திடீரென அங்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது .

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த மண் சரிவில் 10கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இதையடுத்து மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது .

ஆனால் இந்த மண் சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . இதையடுத்து மேலும் சில தொழிலாளர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக கூலி வேளைக்கு வந்த தொழிலாளர்களின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

உதகை அருகே கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அதே விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். என தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜொலிக்கப்போவது யார்..? இன்று ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதல்..!!

More in Featured

To Top