Connect with us

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்..!!

Featured

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்..!!

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு வருகிறது . இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தான் என பல கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் உள்ள 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்

  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம்

  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்

  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்

  • சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம்

  • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top