Connect with us

அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுகள் – Ruturaj தலைமையில் பட்டயகிளப்பும் சென்னை அணி..!!

Featured

அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுகள் – Ruturaj தலைமையில் பட்டயகிளப்பும் சென்னை அணி..!!

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரராக டுப்ளிசஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்துகளை பௌண்டரிகளுக்கு அனுப்பிய பெங்களூரு கேப்டன் டுப்ளிசஸ் மெல்ல மெல்ல அதிரடியை காட்ட தொடங்கினார். இதனால் ஆட்டம் லேசாக பெங்களூர் பக்கம் சென்றபோது முத்தாபிகுர் வீசிய பந்தில் டுப்ளிசஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த படித்தார் மற்றும் மேக்ஸ் வெல் இருவரும் ரன் எதுவும் எடுக்கமாம்ல் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றனர்.

இதையடுத்து 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூரு அணி 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் இந்த முதல் போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

13 வருடங்களாக சென்னை அணியின் கேப்டானக செயல்பட்டு வந்த தோனி நடப்பு தொடரில் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இளம்வீரர் ருதுராஜ் தலைமையின் கீழ் சென்னை அணி முதல் முறை களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top