Connect with us

“இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்! முதல் T20 போட்டியில் வெற்றி யாருக்கு?!”

Sports

“இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்! முதல் T20 போட்டியில் வெற்றி யாருக்கு?!”

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் சொந்த மண்ணில் 3வது முறையாக பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவு சிதைந்ததுடன் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனமும் உடைந்தது. இந்நிலையில் இந்த வடு ஆறுவதற்குள் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்தத் தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த 4 நாட்களில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இந்தத் T20 தொடரில் இந்திய அணி அடுத்த தலைமுறை வீரர்களுடன் சூர்யகுமார் தலைமையில் களமிறங்குகிறது. அவர், உட்பட உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்ற இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே T20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பைதொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிய சூர்யகுமார் யாதவ் தனது விருப்பமான T20 தொடரில் அணியை வழிநடத்த உள்ளார். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ICC T20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால் தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களின் திறன்களை பரிசோதிப்பதாக இருக்கக்கூடும். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய ருதுராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்குசிங், திலக்வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கி உள்ளனர். ஆஸ்திரேலிய அணியானது மேத்யூ வேட் தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கோப்பைதொடரை வென்ற அணியில்இடம் பெற்றிருந்த டிராவிஸ் ஹெட்,கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸம்பா, மார்கஸ்ஸ்டோனிஸ் ஆகியோர் T20 தொடரிலும் இடம் பெற்றுள்ளனர். டேவிட்வார்னருக்கு பதிலாக ஆல்ரவுண்டர்ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் பிரதான வீரர்கள்யாரும் இடம் பெறவில்லை.

எனினும் கேன் ரிச்சர்ட்சன், நேதன் எல்லிஸ், சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறை இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால்கொடுக்க ஆயத்தமாக உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 11 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அடுத்த இரு மாதங்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி, T20 தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது.

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20-ல் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது இஷான் கிஷன் களமிறங்கக்கூடும். ஒருநாள் போட்டிக்கான அணியை போன்று இல்லாமல் தற்போதைய அணியில் 7 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோருடன் திலக் வர்மா, ரிங்கு சிங், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அக்சர் படேல், ஷிவம்துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடது கை பேட்ஸ்மேன்களே.

இந்த T20 தொடரானது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்துவீச்சாளர்களுக்கும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹலைகருத்தில் கொள்ளாமல் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் படேலுடன் இணைந்து நடு ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதில் ரவி பிஷ்னோய் தீவிரம் காட்டக்கூடும். வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ்குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை சவால் கொடுக்க காத்திருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top