Connect with us

“இன்று வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘Animal’ பட Trailer! ஆனால் படத்தின் ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?!”

Cinema News

“இன்று வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘Animal’ பட Trailer! ஆனால் படத்தின் ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?!”

டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் திரைப்படத்தின் Runtime 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘A’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Animal’. இந்த திரைப்படத்தை சந்தீப் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் டிசம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் Runtime 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் சென்சாரில் இந்த படம் ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3 மணி நேரம் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் பொறுமை இழக்கும் நிலையில் 3 மணி நேரத்துக்கு அதிகமாக உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதை கவருமா? ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளதால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு பின்னணியில் திமுகவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் - அண்ணாமலை தாக்கல்..!!

More in Cinema News

To Top